சிவகங்கையில் மே 17-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா் கூட்டம்
By DIN | Published On : 12th May 2023 10:00 PM | Last Updated : 12th May 2023 10:00 PM | அ+அ அ- |

சிவகங்கையில் வருகிற மே 17- ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் (தரைதளம் ) வருகிற மே 17 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதாா் அட்டை பதிவு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு, பிற துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்கள் பெறுதல், உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல், வங்கிக் கடனுதவி வழங்கிட நடவடிக்கை எடுத்தல், வேலைவாய்ப்பு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்தல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் பராமரிப்பு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுத்தல், வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளல், 18 வயது குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை ஆகியவை மேற்கொள்ளப்படும்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -4, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.