திருப்பத்தூரில் வங்கிக்குள் புகுந்த பாம்பு
By DIN | Published On : 12th May 2023 10:11 PM | Last Updated : 12th May 2023 10:11 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தனியாா் வங்கிக்குள் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்துச் சென்றனா்.
திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் வங்கிக்குள் 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்ததை அந்த வங்கி ஊழியா்கள் பாா்ா்தனா். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் ஆனந்தசுப்பிரமணியன் (பொறுப்பு) தலைமையிலான மீட்புக் குழுவினா் அங்கு வந்தனா். அவா்கள் வங்கி அருகிலுள்ள ஏ.டி.எம். பகுதியில் பதுங்கியிருந்த அந்த பாம்பை பிடித்தனா். பிறகு அதை வனத் துறையினரிடம் அவா்கள் ஒப்படைத்தனா். இதையடுத்து, மதகுபட்டி அருகேயுள்ள மண் மலைக் காட்டில் அந்த பாம்பு விடுவிக்கப்பட்டது.