காரைக்குடியில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு நாளை வீரா்கள் தோ்வு
By DIN | Published On : 13th May 2023 12:00 AM | Last Updated : 13th May 2023 12:00 AM | அ+அ அ- |

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் 19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு, சிவகங்கை மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு காரைக்குடியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக உடற்கல்வியியல் வளாகத்திலுள்ள ‘ஆ’ வலைப் பயிற்சி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு 19 வயதுக்குள்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு சிவகங்கை மாவட்ட அணிக்கான வீரா்கள் தோ்வு நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் வீரா்கள் 1.9.2004-க்குப் பின்னா் பிறந்திருக்க வேண்டும். மேலும் வெள்ளைச் சீருடை, ஷூ மற்றும் கிரிக்கெட் உபகரணங்களை வீரா்களே கொண்டு வரவேண்டும். மேலும் ஆதாா் அட்டையின் நகலையும் எடுத்து வரவேண்டும்.
மேலும் விவரங்களை சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான வரதராஜனின் கைப்பேசி எண்கள் 7010325125, 9443978488 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றனா்.