

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பூலாங்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், மதுரை, திண்டுக்கல், நத்தம், அறந்தாங்கி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 600-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன.
காலை 9 மணிக்கு மாடுபிடி வீரா்கள் அரசு உறுதிமொழி எடுத்துக் கொண்டு, 3 குழுக்களாக பிரிந்து காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனா்.
மாடுபிடி வீரா்களுக்கும், வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும் வெள்ளிக் காசு, கட்டில், பீரோ, அண்டா ஆகிய பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதில் காளைகள் முட்டியதில் 20 போ் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த இருவா் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். திருப்பத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.