ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிக்கல் நாட்டு விழா
By DIN | Published On : 22nd May 2023 06:18 AM | Last Updated : 22nd May 2023 06:18 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலைக் கிராமத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடம் கட்ட ரூ 1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினா்.
இந்த விழாவில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சுப. மதியரசன், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி, மருத்துவத் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக, காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்