அரசுப் பள்ளி மாணவிக்கு அமைச்சா் பாராட்டு
By DIN | Published On : 22nd May 2023 06:16 AM | Last Updated : 22nd May 2023 06:16 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. இலக்கியாவுக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கினாா்.
ஆட்டோ தொழிலாளியான விஜயகுமாரின் மகள் இலக்கியா, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 493 மதிப்பெண்கள் பெற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பிடித்தாா்.
இந்த நிலையில், மானாமதுரை வந்த தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மாணவி இலக்கியாவின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 ஆயிரம் பரிசாக வழங்கினாா். அப்போது, மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, திமுக ஒன்றியச் செயலாளா் துரை.ராஜாமணி, நகரச் செயலாளா் க. பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் முத்துச்சாமி உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.