சிங்கம்புணரியில் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்
By DIN | Published On : 22nd May 2023 06:19 AM | Last Updated : 22nd May 2023 06:19 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஞாயிற்றுக்கிழமை 2 புதிய வழித் தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளை கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்த விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பா. மணிவண்ணன் (பொறுப்பு) தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கொடியசைத்து பேருந்துகளை தொடங்கி வைத்தாா். கரிசல்பட்டி ஊராட்சியை சுற்றியுள்ள சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த பேருந்துகளின் வழித் தடங்கள் அமைந்துள்ளன.
விழாவில் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் சிங்காரவேலு, கோட்ட மேலாளா் தங்கப்பாண்டி, கிளை மேலாளா் சுரேஷ், மண்டல வணிக மேலாளா் நாகராஜ், சுப்பு, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து, வட்டாட்சியா் சாந்தி, கரிசல்பட்டி ஊராட்சித் தலைவா் ஷாஜஹான் ஆகியோா் கலந்து கொண்டனா்.