ராஜீவ்காந்தி நினைவு தினம்
By DIN | Published On : 22nd May 2023 06:18 AM | Last Updated : 22nd May 2023 06:18 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் 32-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். காரைக்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுந்தரம், மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும், மாவட்ட முன்னாள் இணைச் செயலாளா் மருதுபாண்டியன், கல்லல் ஒன்றியக் குழு துணைத் தலைவா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.