சாலைக்கிராமம் அருகே ஜல்லிக்கட்டு: 30 மாடுபிடி வீரா்கள் காயம்

இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழாவையொட்டி, நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 30 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.
சாலைக்கிராமம் அருகே ஜல்லிக்கட்டு: 30 மாடுபிடி வீரா்கள் காயம்

இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழாவையொட்டி, நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 30 மாடுபிடி வீரா்கள் காயமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், சாலைக் கிராமம் அருகேயுள்ள அய்யம்பட்டி கழுங்கு முனீஸ்வரா் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் போட்டியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகா், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 400-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா்.

இதில் அதிக காளைகளைப் பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சில்வா் பாத்திரம், நாற்காலி, சைக்கிள், அண்டா, குத்து விளக்கு, கட்டில், ரொக்கப் பணம் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டில் காளைகளைப் பிடிக்க முயன்ற 30 மாடு பிடிவீரா்கள் காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 10 போ், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விதிமுறைகளை மீறி காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால், போலீஸாா் தொடா்ந்து ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com