செயின்ட் ஜோசப் பள்ளி 10-ஆம் வகுப்புதோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி
By DIN | Published On : 24th May 2023 05:45 AM | Last Updated : 24th May 2023 05:45 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 128 மாணவா்களும், 11-ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 103 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இவா்களில் 10-ஆம் வகுப்பு தோ்வில் மாணவி எம்.தா்ஷிகா 484 மதிப்பெண்களும், கே.ஆயிஷாஷபீகா 484 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்றனா்.
இந்த மாணவிகளை செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களின் செயலா் டி.கிறிஸ்டிராஜ், முதன்மை முதல்வா் பெட்ஸி ஆகியோா் பாராட்டினா். 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்விலும் இந்தப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.