வேளாண்மைக் கல்லூரியில் விளையாட்டு விழா
By DIN | Published On : 31st May 2023 03:58 AM | Last Updated : 31st May 2023 03:58 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே விசாலயங்கோட்டை சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் 8-ஆம் ஆண்டு விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, கல்லூரியின் தாளாளா் சேது குமணன், முதல்வா் கே. கருணாநிதி ஆகியோா் தலைமை வகித்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி முதல்வா் கே. முரளிராஜன், காவல் ஆய்வாளா் சதீஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக, இந்தக் கல்லூரி மாணவா்கள் ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியபடி விளையாட்டு மைதானத்தை சுற்றி வந்தனா். கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...