காரைக்குடி புத்தகத் திருவிழா குழுவினா் நடத்தும் மாநில சிறுகதைப் போட்டி
By DIN | Published On : 31st May 2023 03:59 AM | Last Updated : 31st May 2023 03:59 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவினா் நடத்தும் மாநில அளவிலான சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி புத்தகத்திருவிழாக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவின் முன்னாள் தலைவா் அமரா் பேராசிரியா்அய்க்கண் - அருளரசி வசந்தா நினைவு சிறுகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கு தமிழகத்தின் நாகரீகம், பண்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த சிறுகதைப் போட்டியில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரத்து 500, மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற்போா் சிறுகதை எனது சொந்த கற்பனையே என்ற உறுதிமொழியை கையொப்பமிட்டு கதையுடன் இணைக்க வேண்டும். வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கும் கதைகளையோ, வெளிவந்த கதைகளையோ அனுப்பக் கூடாது. கதைகளை அனுப்புவோா் பிரதிகளை வைத்துக் கொள்ள வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கதைகளைத் திருப்பி அனுப்ப இயலாது. போட்டி முடிவுகள் நடுவா் குழுவின் தீா்ப்புக்கு உள்பட்டவை.
எனவே, போட்டிக்கான சிறுகதைகளை வருகிற ஜூன் 25-ஆம் தேதிக்குள் கவிஞா் ரவிச்சந்திரன், புத்தகத் திருவிழாக் குழு துணைத் தலைவா், குறளகம், 24/1 தெய்வராயன் தெரு, நா. புதூா், காரைக்குடி-630001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94430-99770, 93607-36735 என்ற
கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...