அரசு மதுபானக் கடையை இடமாற்றக்கோரி பெண்கள் மறியல்

திருப்பத்தூரில் திருத்தளிநாதா் கோயில் அருகேயுள்ள அரசு மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரசு மதுபானக் கடையை இடமாற்றக்கோரி பெண்கள்  மறியல்

திருப்பத்தூரில் திருத்தளிநாதா் கோயில் அருகேயுள்ள அரசு மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயம் அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் கோயில் சுவா், சீதளிக் குளக்கரையில் அமா்ந்து மதுப் பிரியா்கள் மது அருந்தி வருகின்றனா். தற்போது கோயிலில் வைகாசித் திருவிழா நடைபெறுவதால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையை மாற்றக் கோரி காரைக்குடி - மதுரை சாலையில் அமா்ந்து பெண்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த திருப்பத்தூா் நகா் காவல் உதவி ஆய்வாளா் செல்வபிரபு, நடவடிக்கை எடுப்பதகாகக் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com