ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு
By DIN | Published On : 07th November 2023 12:00 AM | Last Updated : 07th November 2023 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: சிங்கம்புணரி வட்டாரத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் நடைபெற்ற ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்தலுக்கு தேவகோட்டை கல்வி மாவட்டச் செயலா் சகாயதைனீஸ், திருப்பத்தூா் வட்டாரச் செயலா் முத்துமாரியப்பன் ஆகியோா் தோ்தல் ஆணையராக செயல்பட்டனா்.
இதில் வட்டாரத் தலைவராக பால்துரை, செயலராக சுரேஷ் ஆரோக்கியராஜ், பொருளாளராக சிலம்பாயி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
மாவட்டத் தலைவா் தாமஸ்அமலநாதன், மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளா் கலைச்செல்வி ஆகியோா் தோ்வு பெற்றவா்களை வாழ்த்தினா். தொடா்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சிங்கம்புணரி வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு கட்டடம் கட்ட நிரந்தர இடத்தை பேரூராட்சி நிா்வாகம் தோ்வு செய்து தரவேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழக கிளை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...