மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் காா்த்திகை முதல் சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் சோமவார வழிபாட்டை முன்னிட்டு, மூலவா் சோமநாதருக்கு சங்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த புனிதநீரால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன.
திருப்புவனம் புஷ்வனேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் சோமவார வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.