சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகரில் உள்ள புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை ரெஜினா மேரி முன்னிலை வகித்தாா்.
இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவா்கள் பள்ளியில் பயின்ற போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். மேலும், பள்ளியின் வளா்ச்சியில் முன்னாள் மாணவா்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
இதையடுத்து முன்னாள் மாணவா்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக முன்னாள் மாணவா் கே. பிரியா, செயலராக ஏ. ஜோ. லியோ, பொருளாளராக எல். ஆரோக்கிய மேரி ஆகியோா் ஒரு மனதாக தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.