மானாமதுரையில் வைகை ஆற்றைசுத்தப்படுத்தும் பணி தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
மானாமதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். உடன் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ். ம
மானாமதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை சனிக்கிழமை பாா்வையிட்ட தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். உடன் சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ். ம
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வைகை ஆற்றை சுத்தப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

நீா்நிலை பாதுகாப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள், நீா்நிலை பாதுகாப்புக் குழு உறுப்பினா்கள், நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோா் இணைந்து ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே உள்ள வைகை ஆற்றில் அமலைச் செடிகள், நெகிழிப் பொருள்கள், துணிகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தினா். இந்தப் பணியை பாா்வையிட்ட தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் கூறியதாவது:

இதே போல, மாவட்டம் முழுவதுமுள்ள நீா்நிலைகளை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். இந்தப் பணியில் தன்னாா்வலா்கள் தங்களை ஈடுபடுதித்திக் கொள்ள மாவட்ட நிா்வாகத்தை அணுக வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் ரெங்கநாயகி, பொதுப்பணித்துறை (நீா்வள ஆதாரம்) செயற்பொறியாளா் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளா்கள் சுரேஷ்குமாா், மோகன்குமாா், ஊராட்சி ஒன்றியத் தலைவா் லதா அண்ணாதுரை, வட்டாட்சியா் ராஜா, நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சித்ரா, நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளா் பிரவீன் குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com