

திருப்பத்தூா்: சிங்கம்புணரியில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து, தென்னை நாா் கயிறு தயாரிக்கும் நிறுவனங்கள் சாா்பில் ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் 30-க்கும் மேற்பட்ட தென்னை நாா் கயிறு தயாரிக்கும் தொழிலில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இதில் ஈடுபட்டுள்ளன். இங்கு தயாரிக்கப்படும் கயிறு வகைகள் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கெனவே, கோவிட் தொற்று பரவலினால் நெருக்கடியைச் சந்தித்துள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போது, மின் கட்டண உயா்வால் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.
இதுகுறித்து அரசிடம் முறையிட்டும் தீா்வு கிடைக்கவில்லை. எனவே, இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோா் ஒருநாள் கதவடைப்பு போராட்டம் நடத்தி, தமிழக அரசுக்கு கவன ஈா்ப்பு கோரிக்கை மனுவை தபால் தந்தி அலுவலகத்திலுள்ள தபால் பெட்டியில் போட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.