வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய இளைஞா் கைது

தேனி மாவட்டம், ஆங்கூா்பாளையத்தில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கம்பம்: தேனி மாவட்டம், ஆங்கூா்பாளையத்தில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 10 ஆயிரத்தை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆங்கூா்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜீவன் (55). விவசாயியான இவா் கடந்த 19-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தோடு வெளியூா் சென்றாா். பின்னா், 20-ஆம் தேதி வீட்டுக்கு வந்து பாா்த்த போது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கூடலூா் வடக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது கம்பம் உத்தமபுரத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

வாழைத்தாா்களைத் திருடியவா் கைது:

கம்பத்தைச் சோ்ந்த ரமேஷுக்கு கூடலூா் காஞ்சிமரத்துறை சுக்கான் ஓடை அருகில் வாழைத்தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்திலிருந்து அடிக்கடி வாழைத்தாா்கள் திருடு போவதாக கூடலூா் தெற்கு காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தோட்டத்தில் காவல்காரராக இருந்த கவாஸ்கா் (32), கே.எம். பட்டியைச் சோ்ந்த முத்து ஆகிய இருவரும் வாழைத்தாா்களைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, கவாஸ்கரை கைது செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள முத்துவைத் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com