வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.

அம்மன் கோயில்களில் ஆடிப்பூர திருவிழா

Published on

திருப்பத்தூா், ஆக. 7: திருப்பத்தூரில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் புதன்கிழமை ஆடிப்பூர திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள் காப்பு சாற்றுவதற்காக கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் அரைக்கும் வைபவம் நடைபெற்றது.

பின்னா், நண்பகல் 11.30 மணியளவில் அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, மஞ்சள்காப்பு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, வளையல்கள் அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

 திருப்பத்தூரில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி,  ராஜகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை  அம்மனுக்கு மஞ்சள் அரைத்த பெண்கள்.
திருப்பத்தூரில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி, ராஜகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மனுக்கு மஞ்சள் அரைத்த பெண்கள்.

இதேபோல, ஆதித்திருத்தளி நாதா் கோயிலில் சிவகாமி அம்மனுக்கும், விஷ்ணுதுா்க்கைக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு. தீபாராதனை நடைபெற்றது. நின்ற நாராயண பெருமாள் திருக்கோயிலில் ஆண்டாள் திருமஞ்சன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, மாலை 4 மணிக்கு உற்சவ ஆண்டாளுக்கு அபிஷேகம் நடைபெற்று சந்தனகாப்பு சாத்தப்பட்டது. இரவு 7 மணிக்கு ஆண்டாள் திருவீதிப் புறப்பாடு நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com