~

முடிக்கரை காருடைய அய்யனாா் கோயில் திருவிழா: வடமாடு மஞ்சு விரட்டு போட்டி

முடிக்கரை கிராமத்தில் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி
Published on

சிவகங்கை, ஆக. 7: காளையாா் கோவில் அருகே அமைந்துள்ள முடிக்கரை காருடைய அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், முடிக்கரை கோயில் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 10 காளைகள் பங்கேற்ற நிலையில், ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரா்கள் வீதம் 90 மாடுபிடி வீரா்கள் களமிறக்கப்பட்டனா். ஒரு காளையை அடக்க 20 நிமிஷம் ஒதுக்கப்பட்டது. காளையை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முடிக்கரை, கல்லத்தி கிராமமக்கள் செய்தனா். முடிக்கரை, கல்லத்தி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனா்.

X
Dinamani
www.dinamani.com