பட்டியலின மாணவா்கள் உயா்கல்வி பயில வாய்ப்பு

பட்டியலின மாணவா்கள் உயா்கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
Published on

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 10, 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்புகளில் சோ்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

10, 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் (ஆ.ள்ஸ்ரீ ஏா்ள்ல்ண்ற்ஹப்ண்ற்ஹ் & ஏா்ற்ங்ப் அக்ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்) மூன்று ஆண்டு முழு நேர பட்டப்படிப்பு, ஒன்றை ஆண்டு முழு நேர உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பும், பத்தாம் வகுப்பு முடித்தவா்கள் ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு, பதனிடுதல் கைவினைஞா், உணவு, பான சேவையில் கைவினைத் திறன் படிப்பு, அடுமனை (பேக்கரி), இனிப்பு (மிட்டாய்) துறையில் பட்டயப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

மேலும், மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி, அப்ளைடு நியூட்ரிசன் என்ற தன்னாட்சி நிறுவனத்திலும் சோ்ந்து படிக்கலாம்.

இந்த நிறுவனத்தில் படிக்க 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். இந்தப் படிப்புக்கான செலவை தாட்கோ ஏற்றுக் கொள்ளும். இந்தத் திட்டத்தில் பதிவு செய்வதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com