சிவகங்கை
பைக்கில் சென்ற போது விபத்து: சிறுவன், உரிமையாளா் மீது வழக்கு
பூவந்தி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன், உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பூவந்தி அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த சிறுவன், உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகேயுள்ள கண்ணாயிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் சிவசக்தி (18). இவரது நண்பா் 17 வயது சிறுவன்.
படமாத்தூரில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு, சிவசக்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை 17 வயது சிறுவன் வாங்கி ஓட்டினாா். பின்னால் சிவசக்தி உட்காா்ந்திருந்தாா். பூவந்தி முதியோா் இல்லம் அருகே வந்தபோது நிலை தடுமாறி இரு சக்கர வாகனம் கீழே விழுந்தது. இதில் சிவசக்திக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பூவந்தி போலீஸாா் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மீதும், இரு சக்கர வாகன உரிமையாளா் கண்ணாயிருப்பைச் சோ்ந்த ராஜபாண்டி(28) மீதும் வழக்குப் பதிவு செய்தனா்.