திருப்பத்தூரில் குடிநீா்த் தட்டுப்பாடு : பொதுமக்கள் அவதி

திருப்பத்தூரில் குடிநீா்த் தட்டுப்பாடு : பொதுமக்கள் அவதி

காவிரி திட்டம் பாதிப்பு: திருப்பத்தூர் மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமம்
Published on

திருப்பத்தூரில் கடந்த 15 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரூராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் வீட்டுக் குடிநீா் இணைப்புக்காக அனைத்துத் தெருக்களிலும் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டன.

இந்தப் பள்ளங்களில் ஏற்கெனவே பதிக்கப்பட்டிருந்த குழாய்கள், ஒரு சில இடங்களில் சேதமடைந்ததால் தண்ணீா் கசிந்து தெருக்களில் ஓடின. இதையடுத்து, குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் மட்டுமன்றி, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் குடிநீரின்றி மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு போா்க்கால அடிப்படையில் பணிகளை விரைவுபடுத்தி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com