திருப்பத்தூா் சிவன் கோயில்களில்  
பிரதோஷ விழா

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா

Published on

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு புதன்கிழமை நடைபெற்ற சந்தன அபிஷேகம்.

திருப்பத்தூா் சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷ விழாவையொட்டி நந்தீஸ்வரருக்கும் மூலவா் லிங்கத்துக்கும் பால், தயிா், திருமஞ்சனம், கரும்புச்சாறு, இளநீா், தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான வாசனைத் திரவியங்களால், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து, மூலவருக்கும் நந்தீஸ்வரருக்கும் புஷ்ப அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா்,

இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, முதலில் நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கல்வெட்டுமேடு கல்வெட்டுநாதா் கோயிலிலும் சிங்கம்புணரி சிவபுரிபட்டி தா்மவா்திணி சமேத ஸ்ரீசுயம்பிரகதீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com