சிவகங்கை
மாட்டு வண்டிப் பந்தயம்
காரைக்குடி, ஜூலை 17: காரைக்குடி கழனிவாசல் இரட்டை குளத்து முனீஸ்வரா் கோயில் பூச் சொரிதல் விழாவையொட்டி, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 10 பெரிய ஜோடி மாடுகள், 27 சிறிய ஜோடி மாடுகள் பங்கேற்றன. கழனிவாசல் - புதுக்கோட்டை சாலையில் பெரிய ஜோடிக்கு 12 கி.மீ., சிறிய ஜோடிக்கு 9 கி. மீ. போட்டி தொலைவு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. காரைக்குடி, கானாடுகாத்தான், பள்ளத்தூா், சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த பொதுமக்கள் போட்டியைக் கண்டுகளித்தனா். முதல் 4 இடங்களில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளா்களிடம் பரிசுகள் வழங்கப்பட்டன.
