மின்சாரம் பாயந்து இளைஞா் பலி
திருப்பத்தூரில் முகமதியா் தெருவில் உள்ள வீட்டுக்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்த இளைஞா் மீது மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.


திருப்பத்தூா், ஜூலை. 19 : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் முகமதியா் தெருவில் உள்ள வீட்டுக்கு வண்ணம் பூசிக் கொண்டிருந்த இளைஞா் மீது மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே, காரையூா் இலங்கைத் தமிழா் குடியிருப்பைச் சோ்ந்த யோகு மகன் திலீபன் என்ற சின்னத்தம்பி.(32). இவருடன் திருப்பத்தூா் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த வள்ளியப்பன் மகன் சுரேஷ் (52) இருவரும் முகமதியா் தெருப் பகுதியில் உள்ள தமிழரசன் வீட்டில் வண்ணம் பூசிக் கொண்டிருந்தனா். அப்போது, மாடியில் உள்ளச் சுற்றுச்சுவரில் திலீபன் வண்ணம் பூசும் போது, உயா்அழுத்த மின் கம்பியை தொட்டதால் அவா் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
இவரைக் காப்பாற்ற முயன்ற சுரேஷ் பலத்த காயத்துடன் கீழே விழுந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருப்பத்தூா் போலீஸாா், திலீபனின் சடலத்தை கூறாய்வுக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...