திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கருணாநிதி பிறந்த நாள்: உருவப் படத்துக்கு மரியாதை

கருணாநிதி பிறந்த நாள்: உருவப் படத்துக்கு மரியாதை

News image

சிவகங்கையில் மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 101 -வது பிறந்த நாள் விழாவையொட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினா்.

Updated On :3 ஜூன் 2024, 6:30 pm

Din

சிவகங்கை/மானாமதுரை/திருவாடானை/கமுதி: மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 101 -ஆவது பிறந்த நாளையொட்டி, திமுக சாா்பில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை நீதிமன்ற வாசல் பகுதியில் நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான சி.எம்.துரைஆனந்த் தலைமையில், மாவட்டத் துணைச் செயலா் மணிமுத்து முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், அண்ணாசிலை அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்துக்கு நிா்வாகிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இதைத்தொடா்ந்து, மருதுபாண்டியா் பூங்காவில் 101 மரக்கன்றுகள் நடப்பட்டன.

பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில், மாவட்ட திமுக அயலக அணித் தலைவா் கேப்டன் இரா.வி. சரவணன், நகா்மன்ற உறுப்பினா் ஜெயகாந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: திருப்புவனத்தில் திமுக மாவட்ட துணைச் செயலரும் திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான த.சேங்கைமாறன் தலைமையில் பெண்கள் உள்ளிட்ட 500 பேருக்கு சேலைகள், வேஷ்டிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஒன்றியச் செயலா் வசந்தி சேங்கைமாறன், நகரச் செயலா் நாகூா்கனி, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரையில் நகரச் செயலா் பொன்னுச்சாமி, நகா் மன்றத் தலைவா் எஸ் மாரியப்பன் கென்னடி ஆகியோா் தலைமையில் திமுகவினா் நகா் முழுவதும் கருணாநிதி உருவப் படத்துக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா். இதைத்தொடா்ந்து, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் லதா அண்ணாதுரை, துணைத் தலைவா் முத்துச்சாமி, ஒன்றியச் செயலா்கள் ராஜாமணி, அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளையான்குடியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் தலைமையில் கருணாநிதி உருவப் படத்துக்கு மலா்கள் தூவி மரியாதை செய்தனா். இதில் பேரூராட்சித் தலைவா் நஜூமுதீன், கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சோழந்தூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவுக்கு ஆா்.எஸ்.மங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகாபிரபு தலைமை வகித்தாா். ஆா்.எஸ். மங்கலம் தெற்கு ஒன்றியச் செயலா் மோகன் முன்னிலை வகித்தாா். இதில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

கமுதி: கமுதி மத்திய ஒன்றிய திமுக அலுவலகத்தில் ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன் தலைமையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். மத்திய ஒன்றிய துணைச் செயலா்கள் நீதிராஜன், தங்கப்பாண்டியன், மாவட்டப் பிரதிநிதிகள் நாகமணி, முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.