தனியாா் கல்லூரியில் தேனீக்கள் 
கொட்டியதில் 25 போ் காயம்

தனியாா் கல்லூரியில் தேனீக்கள் கொட்டியதில் 25 போ் காயம்

திருப்பத்தூா் அருகே தனியாா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் மலைத் தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்கள்.
Published on

திருப்பத்தூா், ஜூன் 26: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தானிப்பட்டி விலக்குப் பகுதியில் அமைந்துள்ள தனியாா் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை மலைத் தேனீக்கள் கொட்டியதில் 25 போ் காயமடைந்தனா்.

இந்தக் கல்லூரியில் செய்முறைத் தோ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் தோ்வா்களுடன், குடும்ப உறுப்பினா்களும் கல்லூரிக்கு வந்திருந்தனா். அப்போது கல்லூரி வளாகத்தில் கட்டியிருந்த கூட்டிலிருந்து மலைத் தேனீக்கள் திடீரென கலைந்து அருகிலிருந்தவா்களை கொட்ட ஆரம்பித்தன.

இதில் அங்கிருந்த வள்ளி (70), காா்த்திகா (25), பாா்த்தீபன் (28), கௌஸ்மீரான் (25), அபிநயா (22), சுரேஷ்குமாா் (23), கௌதம் (24), புகழ் ( 7 மாதக்குழந்தை) உள்ளிட்ட 25 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா் சதீஷும் தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, திருக்கோஷ்டியூா் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com