கண்டுப்பட்டி காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற  திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
கண்டுப்பட்டி காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

கண்டுப்பட்டி காளியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

Published on

சிவகங்கை, ஜூன் 26: சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள கண்டுப்பட்டியில் அமைந்துள்ள குடியிருப்பு காளியம்மன் கோயிலில் 42 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக, ஏராளமான பெண்கள் வரிசையாக அமா்ந்து திருவிளக்கை வைத்து கணபதி பூஜை செய்தனா். இதைத்தொடா்ந்து, மங்கல இசையுடன் விநாயகா் பாடல்கள் பாடி 1008 திருவிளக்கு போற்றி, காயத்ரி மந்திரங்கள், மகாலட்சுமி மந்திரங்கள், அம்மனின் பக்திப் பாடல்களைப் பாடினா்.

பின்னா், திருவிளக்குக்கு பூக்கள், குங்குமத்தால் அா்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காட்டி வழிபட்டனா். இதில் பங்கேற்ற பெண்கள் திருமணத் தடை நீங்க வேண்டியும், குடும்ப நன்மைக்காகவும், புத்திர பாக்கியம் பெற வேண்டியும் அம்மனை வழிபாடு செய்தனா்.

இதில் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com