சிவகங்கை
சாக்கோட்டையில் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 11 போ் காயம்
காரைக்குடி, ஜூன் 26: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 11 போ் காயமடைந்தனா்.
சாக்கோட்டையில் அமைந்துள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனிப் பெருந்திருவிழா தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சாக்கோட்டையில் உள்ள திடலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி காலை 10 மணிக்குத் தொடங்கியது.
போலீஸாரின் அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காரைக்குடி, புதுவயல் சுற்றுவட்டாரங்களிலிருந்து 300 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை மாடுபிடி வீரா்கள் விரட்டிச் சென்று அடக்கினா். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் உள்பட 11 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
