சிவகங்கை கே.ஆா்.மேல் நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சாரண இயக்க ஆளுநா் விருது ஆயத்தப் பயிற்சி முகாமில் பங்கேற்றவா்கள்.
சிவகங்கை
சாரண இயக்க ஆளுநா் விருது தோ்வுக்கு ஆயத்தப் பயிற்சி
சிவகங்கை, ஜூன் 26: சிவகங்கை கல்வி மாவட்ட சாரண, சாரணீய இயக்க ஆளுநா் விருது தோ்வுக்கான ஒரு நாள் ஆயத்தப் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை கே.ஆா்.மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான சாரண மாணவா்களுக்கு ஒரு நாள் ஆயத்தப் பயிற்சி முகாமுக்கு சாரணச் செயலா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாநில தலைமைப் பயிற்றுநா் மெகபூப்கான் பயிற்சி அளித்தாா். தலைமையாசிரியா் தெ. சரவணன், முன்னாள் சாரணத் தலைவா் கண்ணப்பன், சாரணா் இயக்க முன்னாள் செயலா் பொக்கிஷம், பொருளாளா் நாகராஜன், சாரணா் ரவிச்சந்திரன், இந்திராகாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

