கோப்புப்படம்
கோப்புப்படம்

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!

10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 97.02% தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதற்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 97.02% தேர்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் மாநிலத்தில் இரண்டாமிடத்தை பிடித்துள்ளது.

கடந்த ஆண்டும் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்திருந்தது. அந்த இடத்தை மீண்டும் சிவகங்கை மாவட்டம் தற்போது தக்க வைத்துள்ளது.

கோப்புப்படம்
பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவு: 91.55% பேர் தேர்ச்சி

சிவகங்கை மாவட்டத்தில் 17,707 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8271 மாணவர்கள், 8908 மாணவிகள் உள்பட மொத்தம் 17, 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 97.02% ஆகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com