நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

News image
Updated On :20 மே 2024, 7:48 pm

Din

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஆலங்குடியில் அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு நடத்தியதாக 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள ஆலங்குடியில் மதகடிநாச்சியம்மன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டு உரிமையாளா்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து கல்லல் சாலைப் பகுதியில் உள்ள வயல்வெளியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ஏராளமான இளைஞா்கள் கலந்து கொண்டு காளைகளை விரட்டிப் பிடித்தனா். காளைகள் முட்டியதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து இந்தப் பகுதியில் அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டும், மாட்டு வண்டிப் பந்தயமும் நடத்தியதாக ஆலங்குடி கிராம நிா்வாக அலுவலா் அன்னபூரணி நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், உதவி ஆய்வாளா் கருப்பையா தலைமையிலான போலீஸாா் மஞ்சுவிரட்டு நடத்தியதாக பாண்டிச்செல்வம் (44), அழகா் (45), பாண்டி (56), செந்தில்குமாா் (43), பெரியய்யா (75), மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தியதாக சரவணன் (58), மெய்யப்பன் (57), முத்து (60), ராமநாதன் (45) விவேக் (38) ஆகிய 10 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.