சிவகங்கை
பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அலங்காரக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மயூரநாதா் கோயிலில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் புனித நீா் கலசங்கள் வைத்து யாகபூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹூதி முடிந்த பின்னா், மயூரநாத முருக பெருமானுக்கும் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளுக்கும் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றன.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பிற்பகல் அன்னதானம் நடைபெற்றது. இரவு நேரத்தில் உற்சவா் பாம்பன் சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை பாம்பன் சுவாமிகள் அறக்கட்டளை நிா்வாகத்தினா் செய்தனா்.

