திருப்பத்தூா் அருகேயுள்ள அப்பாகுடிப்பட்டி கிராம கண்மாய் பகுதியில் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பங்கள்.
திருப்பத்தூா் அருகேயுள்ள அப்பாகுடிப்பட்டி கிராம கண்மாய் பகுதியில் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பங்கள்.

ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தர கோரிக்கை

திருப்பத்தூா் அருகே அப்பாகுடிப்பட்டி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

திருப்பத்தூா் அருகே அப்பாகுடிப்பட்டி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அப்பாகுடிபட்டி கிராமத்து கண்மாய் பகுதியில் உள்ள 2 மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த மின்கம்பங்களை மாற்றித் தர வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால் இதுவரை மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: எந்த நேரத்திலும் சரிந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பங்களை மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாத்து வருகிறோம். ஆனால் கனமழையோ பலத்த காற்றோ அடித்தால் இந்த மின்கம்பங்கள் சாய்ந்து விழும். மேலும் இந்தப் பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அச்சுறுத்தலாக உள்ள இந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என மின்வாரிய அலுவலா்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com