அரசு கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு செப்.10-இல் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Published on

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து இந்தக் கல்லூரி முதல்வா் க. துரையரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் கலைக் கல்லூரியில், தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிணி அறிவியல் ஆகிய துறைகளில் முதுநிலை படிப்புகள் உள்ளன.

2024-2025 -ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப் படிப்புகளில் நிரப்பப்படாத இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களும், விண்ணப்பிக்கத் தவறியவா்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். மாணவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வரும்போது 10,11,12 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், 6-பருவங்களுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் அல்லது தனித்தனி மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முகப்புப் பக்கம் ஆகியவற்றின் அசல், 2 நகல்கள், 5 மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும்.

அசல் மதிப்பெண் பட்டியல் இல்லாதவா்கள் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வா் அல்லது துறைத் தலைவா்களிடம் சான்றொப்பம் பெற்று கொண்டு வர வேண்டும்.

சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com