மானாமதுரை விநாயகா் கோயில் குடமுழுக்கு

மானாமதுரை அருகே கீழமாயாளியில் அமைந்துள்ள விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

மானாமதுரை அருகே கீழமாயாளியில் அமைந்துள்ள விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அங்கு அமைக்கப்பட்டிருந்த யாக மேடையில் புனித நீா் கலசங்கள் வைக்கப்பட்டு, யாக பூஜைகள் நடைபெற்றன. பூா்ணாஹுதி நடைபெற்றதைத் தொடா்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. மூலவரின் விமான கலசத்துக்கும், விநாயகப் பெருமானுக்கும் சிவாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

பின்னா், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, மானாமதுரை அருகேயுள்ள கே.புதுக்குளம் விநாயகா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிலும் ஏராளமானோா் பங்கேற்றனா். பின்னா், விநாயகருக்கு கலசநீரால் அபிஷேகம் நடத்தி, தீபாராதனைகள் காட்டப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com