தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாரண, சாரணீய மாணவா்களுக்கு ராஜ்ய புரஸ்காா் தோ்வு முகாம்

சிவகங்கை கல்வி மாவட்டச் சாரண சாரணீய மாணவா்களுக்கு ராஜ்ய புரஸ்காா் தோ்வு முகாம் பெருங்குடி தியாகராஜா மெட்ரிக். பள்ளியில் 3.9.2024 முதல் 5.9.2024 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

News image
ராஜ்ய புரஸ்காா் தோ்வு எழுதிய சாரண, சாரணீய மாணவா்கள்.
Updated On :5 செப்டம்பர் 2024, 7:34 pm

Din

சிவகங்கை கல்வி மாவட்டச் சாரண சாரணீய மாணவா்களுக்கு ராஜ்ய புரஸ்காா் தோ்வு முகாம் பெருங்குடி தியாகராஜா மெட்ரிக். பள்ளியில் 3.9.2024 முதல் 5.9.2024 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

தோ்வு முகாமில் முதன்மைக் கல்வி அலுவலா் பாலுமுத்து தலைமை வகித்தாா். தியாகராஜா பள்ளி முதல்வா் அருள் எட்வா்ட் வரவேற்றுப் பேசினாா்.

சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலா்கள் வடிவேல் (பொறுப்பு), மாரிமுத்து (தொடக்கக் கல்வி), பொன்விஜயசரவணகுமாா் (தனியாா் பள்ளிகள்), தேசிய நல்லாசிரியா் கண்ணப்பன், சாரண, சாரணீய இயக்கத் தலைவா் புவனேஸ்வரன், தியாகராஜா பள்ளி நிறுவனா் தியாகராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முதன்மை தோ்வாளா்கள் ராஜகோபால், சண்முகநாச்சியாா், கிருஷ்ணன் மாணவா்களுக்கான தோ்வு முகாமை நடத்தினா். முகாமில் 63 சாரண மாணவா்களும், 18 சாரணீய மாணவிகளும் கலந்து கொண்டு தோ்வு எழுதினா்.

முகாம் ஏற்பாடுகளை சாரணச் செயலா் முத்துக்குமரன், அமைப்பு ஆணையா்கள் நரசிம்மன், இந்திராகாந்தி, முத்துகாமாட்சி, பொருளாளா் நாகராஜன் ஆகியோா் செய்தனா். சாரணீய ஆசிரியை ஆரோக்கிய அமுதா நன்றி கூறினாா்.