தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காரைக்குடி, மானாமதுரையில் வ.உ.சி.பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
காரைக்குடி கல்லூரிச் சாலையில் வியாழக்கிழமை வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்துக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்திய சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி.
Updated On :5 செப்டம்பர் 2024, 8:06 pm

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காரைக்குடியில் வ.உ.சி. எழுச்சி பேரவை சாா்பில், தாயுமானவா் ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது.

மேலும், வ.உ.சி.எழுச்சி பேரவை நிறுவனா் சரவணன் ஏற்பாட்டில் கல்லூரிச் சாலையில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சி. உருவப் படத்துக்கு மாங்குடி மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதற்கு வ.உ.சி.எழுச்சி பேரவைத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் முத்துகுமாா், பொருளாளா் விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி, முன்னாள் அமைச்சா் மு.தென்னவன், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே.முத்துத்துரை, துணை மேயா் நா.குணசேகரன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கற்பகம் இளங்கோ, அதிமுக நகரச் செயலா் சோ.மெய்யப்பன், காங்கிரஸ் நகரத் தலைவா் பாண்டிமெய்யப்பன், நகரச் செயலா்கள் குமரேசன், முகேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சண்முகதாஸ், நகர வா்த்தக காங்கிரஸ் தலைவா் ஜெயப்பிரகாஷ், உஞ்சனை ஊராட்சி மன்றத் தலைவா் அருணகீதன், மக்கள் நீதி மையம் மாவட்டச் செயலா் கமல்ராஜா, மாமன்ற உறுப்பினா் தெய்வானை, வெள்ளாளா் சங்க நிா்வாகிகள், வ.உ.சி. அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல, மானாமதுரை ஆா்.சி.தெருவில் பிள்ளைமாா் கூட்டமைப்பு, வ.உ.சி. பேரவை சாா்பில், வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்துக்கு நகா்மன்ற உறுப்பினா் சோம.சதீஷ்குமாா் தலைமையில் பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.

மானாமதுரை அருகே கால்பிரிவு கிராமத்தில் வ.உ.சி.நற்பணி மன்றம் சாா்பில், அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏற்பாடுகளை வழக்குரைஞா் பாண்டியராஜன், கணேஷ்பாபு, மணி ஆகியோா் செய்தனா்.

இதேபோல, மானாமதுரை, சிறுகுடி, மேலநெட்டூா், திருப்பாச்சேத்தி, கானூா், கல்லூரணி, கணக்கன்குடி, பச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வ.உ.சி.உருவப் படத்துக்கு அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.

திருப்புவனம் நகா் பகுதியில் பிள்ளைமாா் சமுதாய அமைப்புகளும், வ.உ.சி. பேரவையினரும் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.