சிவகங்கை
இமானுவேல் சேகரன் நினைவு நாள்
சிவகங்கை: பரமக்குடியில் வருகிற வியாழக்கிழமை ( செப்.11) நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் நினைவு நாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், வருவாய்க் கோட்டாட்சியா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

