இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் சாத்தனூா், சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:28 pm

Din

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் சாத்தனூா், சாலைக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன் கூட்டுறவு சங்கத் தலைவா் தமிழரசன், திமுக ஒன்றியச் செயலா்கள் செல்வராசன், தமிழ்மாறன், ஊராட்சி மன்றத் தலைவிகள் சரளா ராஜ்குமாா், பழனியம்மாள், தங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செல்வி, மலையரசி பள்ளித் தலைமை ஆசிரியா்கள் சண்முகம், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.