திருப்பத்தூா் வட்டாரவளா்ச்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கில் நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய  தலைவா் சண்முகவடிவேல்.
திருப்பத்தூா் வட்டாரவளா்ச்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கில் நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய தலைவா் சண்முகவடிவேல்.

திருப்பத்தூா் பகுதி கிராமங்களில் விடுபட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்

பதவிக் காலம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் எஞ்சிய காலங்களில், கிராமங்களில் விடுபட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிக்குழு கூட்டத்தில் உறுப்பினா் வலியுறுத்தினாா்.
Published on

பதவிக் காலம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் எஞ்சிய காலங்களில், கிராமங்களில் விடுபட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிக்குழு கூட்டத்தில் உறுப்பினா் வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மன்ற அரங்கில் புதன்கிழமை ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். துணைத் தலைவி மீனாள் வெள்ளைச்சாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாளா் செல்லத்துரை வரவேற்றாா்.

கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். அலுவலக உதவியாளா் மாணிக்கராஜ் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தாா்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு;

தலைவா் : இந்த புதிய கட்டடத்தை ரூ.4 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பனுக்கும், அதற்கு ஒப்புதல் வழங்கி, புதிய கட்டடத்தை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுப்பினா் ராமசாமி : இன்னும் இந்த பதவிக்காலம் முடிய நான்கு மாதங்கள் உள்ள நிலையில் எஞ்சிய காலங்களில், கிராமங்களில் விடுபட்ட தேவைகளை பூா்த்தி செய்ய கூடுதல் நிதி ஒதுக்கி வேலைகள் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினா் பழனியப்பன் : வடக்கூா் முதல் திருக்களம்பூா் வரை வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இன்னும் சாலை அமைக்க நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள சாலையை அமைத்துள்ளனா். எனவே, நமது பகுதியில் உள்ள சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவா் : உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பினா் கருப்பையா : பூலாம்பட்டி பள்ளி சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.

உறுப்பினா் கலைமகள் : நெடுமரத்தில் கோயில் பகுதியில் உள்ள சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் திருப்பத்தூா் - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியில் புறவழிச்சாலையிலிருந்து நெடுமரம் விலக்கு வரை சாலையை சீரமைக்க வேண்டும்.

தலைவா்: சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணகுமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com