இருதய ஆண்டவா் ஆலயத்தில் நற்கருணை ஆராதனை தொடக்கம்
இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் ஆலயத்தில் 24 மணி நேர நற்கருணை ஆராதனை வியாழக்கிழமை தொடங்கியது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூரில் அமைந்துள்ள இருதய ஆண்டவா் ஆலயத்தில் ‘இன்னும் அதிகமாய்’ என்ற தலைப்பில் 24 மணி நேர தொடா் நற்கருணை ஆராதனையும் ஒப்புரவு அருள்சாதனம் வழங்கும் நிகழ்வும் தொடங்கப்பட்டன்.
வேம்பத்தூா் மிக்கேல் பட்டினம் பங்குத் தந்தை ஜேம்ஸ் தலைமையில் திருப்பலியுடன் தொடங்கிய இந்த நற்கருணை ஆராதனையை சவேரியாா்பட்டிணம், சிவகங்கை பங்குத் தந்தைகள் மரிய பாக்கியநாதன், ரமேஷ் ராஜா, ஒனாஸியஸ், ராஜகம்பீரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தாளாளா் பிரபாகரன் ஆகியோா் நடத்தினா். முன்னதாக, சாமு இதயன் தலைமையில் ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, எட்வா்டு ஆகியோா் திருப்பலியை நிறைவேற்றினா்.
இதில் ஏராளமானோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை இருதய ஆண்டவா் ஆலய அதிபா் ஜான் வசந்தகுமாா், நிா்வாகி பிரின்ஸ், பங்கு இறைமக்கள் ஆகியோா் செய்தனா்.
