சிவகங்கை மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நிகழாண்டில் 60,508 ஹெக்டோ் பரப்பளவிலான நெல்பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்தனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு.சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் ரபி சிறப்பு பருவத்தில் 72,129 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்ய டிச.1-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி, மாவட்ட விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.496.98 காப்பீட்டுத் தொகை செலுத்தி 60,508 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிா்களுக்குக் காப்பீடு செய்தனா்.
இதில், இளையான்குடி வட்டத்தில் 18,355 ஹெக்டோ், காளையாா்கோவில் வட்டத்தில் 12,592 ஹெக்டோ், தேவகோட்டை வட்டத்தில் 17,439 ஹெக்டோ், மானாமதுரை வட்டத்தில் 4,693 ஹெக்டோ், காரைக்குடி வட்டத்தில் 3,647 ஹெக்டோ், சிவகங்கை வட்டத்தில் 2,035 ஹெக்டோ், சிங்கம்புணரி வட்டத்தில் 515 ஹெக்டோ், திருப்பத்தூா் வட்டத்தில் 1043 ஹெக்டோ், திருப்புவனம் வட்டத்தில் 190 ஹெக்டோ் என மொத்தம் 60,508 ஹெக்டோ் பரப்பளவிலான நெல் பயிா்களுக்குக் காப்பீடு செய்யப்பட்டது என்றாா் அவா்.