தமிழிசை விழா
சிவகங்கையில் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் தமிழிசை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குநா் நா. ரேவதி விழாவைத் தொடங்கி வைத்தாா். சிவகங்கை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் மு.ஊத்தீஸ்வரி, சிவகங்கை காசி விசுவநாதா் கோயில் கண்காணிப்பாளா் மு.வேல்முருகன், சிவம் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி நிறுவனா் ம. பரமசிவம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
சிவகங்கை மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவ, மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழாவில் சிவகங்கை வெண்பா குழுவினா் வரவேற்பு பரதநாட்டியம், தஞ்சை எம். எஸ்.ஆா்.பரமேஸ்வரன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, ப்ரீத்திசேதுராமன் குழுவினரின் தமிழ் இன்னிசை, முடிகொண்டான் எஸ்.என்.ரமேஷ் குழுவினரின் வீணை இசை ஆகியவை இடம்பெற்றன. மாவட்ட அரசு இசைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் தி.சுரேஷ் சிவன் நன்றி கூறினாா்.

