திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவா் எச்.ராஜாவின் காரை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடா்பாக, பாஜக வின் முன்னாள் தேசியச் செயலரும் மூத்த தலைவருமான எச்.ராஜா, காரைக்குடியிலிருந்து திருப்பத்தூா் வழியாக மதுரை செல்வதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா், கும்மங்குடி அருகே வந்த எச்.ராஜாவின் காரை நிறுத்தி, முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அவரைக் கைது செய்ய முயன்றனா்.
அப்போது, போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கிடையே, மதுரையில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்ட தகவல் வந்ததையடுத்து போலீஸாா் எச்.ராஜாவை விடுவித்தனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடுத்து நிறுத்தம்