ஓவியப் போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்குப் பாராட்டு
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்ரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் மேல்நிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவன் ஆா்.பிரகாஷ், பிளஸ் 1 மாணவன் என்.தேவா ஆகியோா் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோரிடம் சான்றிதழும் ரொக்கப் பணமும் பெற்றனா்.
பள்ளிச் செயலா் அழகுமணிகண்டன், தலைவா் லெட்சுமணன், பொருளாளா் அங்கப்பன், தலைமை ஆசிரியா் கமலம், ஓவிய ஆசிரியா் கண்ணன் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்து கௌரவித்தனா்.
