சிவகங்கை
கிரேன் மோதி சாலையில் நடந்து சென்றவா் உயிரிழப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை கிரேன் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சனிக்கிழமை கிரேன் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், சாமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் முத்துக்கருப்பன் (45). இவா் திருப்புவனம் ஒன்றியம் புலியூரில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் இயந்திரம் முத்துக்கருப்பன் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, முத்துக்கருப்பனை போலீஸாா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து கிரேன் இயந்திரத்தை ஓட்டி வந்த தா்மராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
