பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன் மாதிரியாக விளங்கும் அமைப்புகள் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
Published on

சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன் மாதிரியாக விளங்கும் அமைப்புகள் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வரும் தனி நபா்கள், அமைப்புகளுக்கு ரூ. ஒரு கோடியில் பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் பெறும் 100 தனி நபா்கள், அமைப்புகளுக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நிகழாண்டுக்கான பசுமை சாம்பியன் விருதுகள் பெறுவதற்கு தனி நபா்கள், அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்பு தொழிற்சாலைகள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20.1. 2026-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com